/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!
/
முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை!
ADDED : ஜூன் 09, 2017 02:05 PM

* எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள். முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை.
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் துணை நில்லுங்கள்.
* யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். சுயகாலில் நிற்கப் பழகுங்கள்.
* உலகை விட்டுச் செல்லும் போது மனிதன் அழுகிறான். ஆனால், மகான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
* உலகில் கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி தவிர வேறு ஏதுமில்லை.
* துறவிக்கு பணத்தை வெறுக்கும் சக்திஇருக்கும். மற்றவர்கள் பணத்தால் பொம்மை போல ஆட்டி வைக்கப்படுகிறார்கள்.
* கஷ்டங்கள் நீடிப்பதில்லை. ஓடும் நீரைப் போல ஓடி மறைந்து விடும்.
* துன்பம் என்பது கடவுளின் பிரசாதம். அது நம்மை நல்வழிப்படுத்தவே வழங்கப்படுகிறது.
* நட்பு என்பது ஒருவருக்கொருவர் பொழுதுபோக்க அல்ல. தேவையான சமயத்தில் எச்சரித்து திருத்தும் கடமையும் நட்பிற்கு இருக்கிறது.
* கல்வியால் மனிதன் தானும் மேன்மை அடையலாம். மற்றவர்களையும் மேன்மை அடையச் செய்யலாம்.
* மனதை அடக்கப் பழகுங்கள். பிறரது அந்தரங்கம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாதீர்கள்.
* ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருக்கிறார். அறிவைக் கொண்டு அவரை அளக்க முற்படாதீர்கள்.
* மதம் பிடித்த யானை போல மனம் செயல்படுகிறது. தியானத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
* கடவுளின் திருநாமத்தை தினமும் ஜெபியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
* தெய்வ வழிபாட்டுக்கு உரிய நேரம் எதுவானாலும் மனம் ஒன்றி வணங்குவது அவசியம். ஒருநாள் கூட இதை மறக்காதீர்கள்.
* தூய்மையான மனம் படைத்தவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் தூய்மையாக பார்க்கிறார்கள். அவர்களின் சொல்லும், செயலும் எல்லாருக்கும் நன்மையளிக்கும்.
சொல்கிறார் சாரதாதேவியார்

