தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/பாலி பல்லாலீஸ்வரர்

பாலி பல்லாலீஸ்வரர்

பாலி பல்லாலீஸ்வரர்


ADDED : செப் 03, 2013 02:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2013 02:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரசாதம் சாப்பிட்டால் நோய் தீர்க்கும் பல்லாலீஸ்வர விநாயகர் கோயில், மகாராஷ்டிர மாநிலம் பாலியில் உள்ளது.

தலவரலாறு: கிருதயுகத்தில் கல்யாண் மற்றும் இந்துமதி தம்பதிகளுக்கு பிறந்த பல்லால் என்ற சிறுவன், கணபதி பக்தனாக விளங்கினான். அவனுக்கு பல நண்பர்கள் உண்டு. சிறுசிறு கற்களைக் கண்டெடுக்கும் பல்லால், அவற்றுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்து, நண்பர்களுடன் இணைந்து வழிபடுவான். ஒருமுறை, பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல், ஊருக்கு வெளியே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சென்றான். பெரிய கல் ஒன்றை எடுத்து, அதை கணபதியாகக் கருதி வழிபட்டான்.

அவன் கணபதியின் வரலாறை எடுத்துச்சொல்ல, மற்ற சிறுவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். இந்த பக்தி மயக்கத்தில் அவர்களுக்கு பசி மயக்கம் தெரியவில்லை. வீட்டுக்கும் திரும்பவில்லை. தங்கள் குழந்தைகளைக் காணாத பெற்றோர் ஊருக்கு வெளியே குழந்தைகள் இருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்தனர். அங்கே பல்லால் தியானத்தில் மூழ்கி இருந்தான். அவனை எழுப்பும் முயற்சி தோல்வியடைந்தது. எனவே, ஊரார் சொல்லாமல் வந்த தங்கள் குழந்தைகளை கண்டித்து வீட்டுக்கு கூட்டிச்சென்றனர். இத்தனைக்கும் காரணம் பல்லால் தான் என்பது தெரிய வந்தது. அவனது தந்தையிடம் புகார் செய்தனர். பல்லாலின் தந்தை கல்யாண் அவ்விடத்திற்கு வந்து அங்கு வைத்திருந்த பூஜை பொருட்களை அடித்து நொறுக்கி விட்டார்.

கணபதியோடு ஒன்றிப்போய், தியானத்தில் இருந்த பல்லாலுக்கு, நடந்தது எதுவும் தெரியவில்லை. அவனை தந்தை அடித்து உதைத்தார். அதன்பிறகே லேசாக கண் விழித்தான். நடந்ததை அறிந்து வருந்தினான்.

விநாயகரிடம், ''அப்பனே! உன்னை 'விக்னனஷாகா' என சொல்கிறார்கள். இதற்கு 'தடைகளை நீக்குபவன்' என பொருள். என் பூஜைக்கு இப்போது ஏற்பட்டுள்ள தடையை நீயே நீக்க வேண்டும்,''என்றான். உடனே ஊரார் அவனை மரத்தில் கட்டி வைத்தனர். பசியாலும் தாகத்தாலும் உடல் வலியாலும் அவன் தவித்தான். அப்போது அந்தணர் வடிவத்தில் விநாயகர் அங்கு வந்தார்.

அவனைத் தொட்டார். உடனே அவனது பசி, தாகம், வலி, தீர்ந்து போனது. அவனுக்குள் புது தெம்பு ஏற்பட்டது. அப்போது அவனுக்கு கணபதி காட்சி தந்தார். அவரிடம் பல்லால், அவ்விடத்திலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். விநாயகரும், பல்லாலின் பெயரை தனக்கு சூட்டிக்கொண்டு 'பல்லாலீஸ்வரர்' என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.

சிறப்பம்சம்: கோயிலின் அருகில் இரண்டு குளங்கள் உள்ளன. இதில் ஒரு குளத்தில் யாரும் இறங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்த தண்ணீர் முழுவதும் விநாயகரின் அபிஷேகத்திற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது. இங்குள்ள மிகப்பெரிய மணி ஐரோப்பாவில் செய்யப்பட்டது.

பால் பிரார்த்தனை: இத்தலத்தில் தங்கி, ஒரு நாள் முழுவதும் பால் மட்டும் குடித்து விரதமிருந்து, 21 முறை விநாயகரை சுற்றி வந்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியன்று நள்ளிரவில் படைக்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நீங்கும்.

திறக்கும் நேரம்: காலை 5- இரவு 10.30.

இருப்பிடம்: மும்பையிலிருந்து 124 கி.மீ., புனேயிலிருந்து 111 கி.மீ. பஸ் உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us