sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பொறுமை தோற்பதில்லை

/

பொறுமை தோற்பதில்லை

பொறுமை தோற்பதில்லை

பொறுமை தோற்பதில்லை


ADDED : மே 01, 2020 07:21 PM

Google News

ADDED : மே 01, 2020 07:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனுக்கு பொறுமை மிக அவசியம். பொறுமையுள்ளவன் என்றும் அழிவதில்லை.

* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்பால் மட்டுமே உணர முடியும்.

* அநியாயம், பொய்யைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.

* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயனில்லை.

* கடவுளை முழுமையாக நம்பினால் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

* எதையும் எதிர்பார்க்காத துாய பக்தியே எல்லாவற்றிலும் சிறந்தது.

* எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் ஞானி கலங்குவதில்லை.

* விவேகம், நம்பிக்கை இல்லாவிட்டால் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது.

* பெண், பொன் ஆசை தான் மனிதனை கடவுளிடமிருந்து பிரிக்கிறது.

* விவேகம் ஏற்படாவிட்டால் சாஸ்திரங்களின் உட் பொருளை உணர முடியாது.

* எண்ணத்தைப் பொறுத்தே மனிதனின் வாழ்வு அமைகிறது.

* ஞானத்தின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாமல் இருப்பதாகும்.

* கடவுள் என்னும் எஜமானருக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

* வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.

* கடவுள் மீது அசையாத நம்பிக்கை இருந்தால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

* அக்கறை இல்லாதவனுக்கு எளிய விஷயம் கூட கைகூடுவதில்லை.

* நீ நல்லவனாக இருந்தால் கடவுள் அருளால் உன் மனைவி, மக்களும் நல்லவராக இருப்பர்.



சொல்கிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us