sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இரட்டை நாய் வாகனத்துடன் பைரவர்

/

இரட்டை நாய் வாகனத்துடன் பைரவர்

இரட்டை நாய் வாகனத்துடன் பைரவர்

இரட்டை நாய் வாகனத்துடன் பைரவர்


ADDED : நவ 14, 2019 10:20 AM

Google News

ADDED : நவ 14, 2019 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.20 - கால பைரவாஷ்டமி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் இரட்டை நாய் வாகனத்துடன் பைரவர் வீற்றிருக்கிறார். பைரவாஷ்டமி அன்று இவரை தரிசிக்கலாமே!

தேவர்களுக்கு ஒரு சமயம் துன்பம் ஏற்பட்ட போது சிவலோகம் சென்றனர். தவத்தில் இருந்த சிவனை எழுப்பிட, மன்மதன் மூலம் மலர்க்கணை தொடுத்தனர். தவம் கலைந்த சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். அவரது கோபத்தை உலகத்தால் தாங்க முடியாது என்பதால் அதை ஒன்று திரட்டி கடலுக்குள் புகுத்தினார் பிரம்மா. அந்த கோபக்கனல் ஒரு குழந்தையாக உருவெடுக்க அதற்கு 'ஜலந்திரன்' எனப் பெயரிட்டார் பிரம்மா. ஜலத்திற்குள் (தண்ணீர்) இவர் பிறந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

கோபக்காரனாக ஜலந்திரனுக்கு குணவதியான பிருந்தா (துளசி) என்பவள் மனைவியானாள். அவளது கற்புத்தீ அவனுக்கு காவலாக இருந்தது. இதைப் பயன்படுத்தி தேவர்களுக்கு தீங்கு செய்தான். அவர்கள் திருமாலிடம் தஞ்சம் அடையவே, அவர் ஜலந்திரனாக உருமாறி பிருந்தையிடம் சென்றார். கற்புக்கரசியான அவள் வந்திருப்பவர் திருமால் என்பதை அறிந்து, தீயில் புகுந்து உயிர் விட்டாள். இதையறிந்த ஜலந்திரன் திருமாலுடன் போர் புரிந்தான். அவனை வீழ்த்த எண்ணிய திருமால், பூமியில் ஒரு வட்டம் வரைந்து அதைக் கையில் துாக்குமாறு கூறினார். பிருந்தாவின் பிரிவால் பலம் இழந்த ஜலந்திரன் அதை எடுக்க முயன்ற போது, அந்த வட்டம் சக்கரமாக மாறி அவனைக் கொன்றது.

பிருந்தாவுக்கு செய்த துரோகத்துக்காக சாம்பலாகக் கிடந்த பிருந்தாவுடன் கலந்தார் திருமால். இதை கேள்விப்பட்ட மகாலட்சுமி வருந்தினார். பின்னர் இத்தலத்தில் உள்ள சிவனை வழிபட்டு, திருமாலை அடையும் பேறு பெற்றாள்.

அப்போது திருமாலிடம் சில விதைகளை கொடுத்து பிருந்தையின் சாம்பலில் துாவச் சொன்னார் சிவன். அதன்படி செய்ய அதில் துளசிச்செடி தோன்றியது. அதன் இலைகளைப் பறித்து சிவனை வழிபட்டதோடு, மாலை தொடுத்து தானும் அணிந்தார் திருமால். இதனடிப்படையில் இங்கு திங்களன்று சிவனுக்கு துளசி அர்ச்சனை நடக்கிறது.

இங்குள்ள பைரவர் சன்னதி விசேஷமானது. இவருக்கு வாகனமாக இரண்டு நாய்கள் இருப்பது மாறுபட்ட அமைப்பாகும். இவரை தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளி மாலை சாத்தி வழிபட கடன் தொல்லை தீரும். வளர்பிறை அஷ்டமியில் வில்வமாலை சாத்தி வழிபட செல்வம் சேரும்.

எப்படி செல்வது: மதுரை -ராமேஸ்வரம் சாலையில் 34 கி.மீ.,

விசேஷ நாட்கள்: கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

நேரம் : காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு : 04574- 266 303, 266 495

அருகிலுள்ள தலம்: மடப்புரம் பத்ரகாளிகோயில் (22 கி.மீ.,)






      Dinamalar
      Follow us