sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம்

/

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம்

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம்

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம்


ADDED : செப் 23, 2016 10:50 AM

Google News

ADDED : செப் 23, 2016 10:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கணவன், மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

* கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.

* நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.

* குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

* உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.

* மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.

* பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.

* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிரச்னை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

* குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும். வீண் செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றைக் கடைபிடியுங்கள்.

* குடும்பத்தில் அனைவரும் அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

* பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமலும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

* தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனம் தான் அதை தேர்ந்தெடுத்தது.

* மனத்தூய்மை, சுத்தமான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றுடன் கூடியதாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.

* உண்மையில் மனிதனுக்கு எதிரி உண்டு என்றால் அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு உடலில் மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் எண்ணும் எண்ணமோ எங்கும் பாயும் ஆற்றல் கொண்டது.

கணவன், மனைவி பற்றி வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us