sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நரம்புக்கோளாறுக்கு பிரார்த்தனை

/

நரம்புக்கோளாறுக்கு பிரார்த்தனை

நரம்புக்கோளாறுக்கு பிரார்த்தனை

நரம்புக்கோளாறுக்கு பிரார்த்தனை


ADDED : டிச 17, 2012 03:01 PM

Google News

ADDED : டிச 17, 2012 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரம்பு கோளாறு நீங்க, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கள் கிழமைகளில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு.

தல வரலாறு:





சோழர் காலத்தில் பேரம்பாக்கம் அந்தணர்கள் வாழ்ந்த ஊராக விளங்கியது. இங்குள்ள சோழீஸ்வரர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுவாமியின் அன்றைய திருப்பெயர் குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர். நாளடைவில் சோழீஸ்வரர் ஆகசுருங்கிவிட்டது. 1947ல், இந்திய கல்வெட்டு துறை ஆய்வின் மூலம் இவ்வூரில் 14 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவற்றின் வாயிலாக கோயில் பூஜைக்கு தீபம் ஏற்ற, நன்கொடை அளித்தது குறித்து அறிய முடிகிறது.

நரம்பு மருத்துவர்:





இக்கோயிலின் சிறப்பே நரம்பு கோளாறுகளை நீக்கும் அரிய மருத்துவராக, இறைவன் விளங்குவதாகும். இவ்வூரில் உள்ள பெரியவர் ஒருவர் நரம்பு கோளாறினால், படுக்கையில் கிடந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏராளமாக செலவாகும் என்றனர். பெரியவரோ சோழீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை பலித்ததால், தன் நோய்க்கு செலவாக இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தில் கோயிலுக்கு கொடி மரம் அமைத்துக் கொடுத்தார்.

வழிபடும் முறை:





நரம்புக் கோளாறு உள்ளவர்கள் திங்கள்கிழமை இங்கு வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். வேண்டுதல் நிறைவேறியதும் சிறப்பு பூஜை செய்யலாம்.

ஆலய அமைப்பு:





தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட கோயில். ஆனால், சோழீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். நுழைவுவாசலில் சக்தி கணபதி, அருகில் காசி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. விநாயக மந்திரங்களில் உயர்ந்தது 'ஓம் சக்தி விநாயக நம:' என்பதாகும். இங்குள்ள சக்திகணபதி முன் இந்த மந்திரத்தை 108 தடவை சொல்வோருக்கு நினைத்தது கைகூடும்.

இங்குள்ள காமாட்சி அம்மன் பக்தர் குறைதீர்க்கும் கருணைக்கடலாக, தெற்கு நோக்கி நிற்கிறாள். வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, ஐயப்பன், நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் கூவம் ஆறு.

திருவிழா:





காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை.

இருப்பிடம்:





சென்னை கோயம்பேட்டில் இருந்து, 60 கி.மீ. அரக்கோணத்தில் இருந்து 30 கி.மீ, திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ. தொலைவில் பேரம்பாக்கம் அமைந்துள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கடம்பத்தூரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் பேரம்பாக்கம் வரலாம்.

திறக்கும் நேரம்:





காலை, 6- 11:30, மாலை 4- இரவு 7.

போன்:





94431 08707, 94451 27892.

- என்.ஆனந்தன்






      Dinamalar
      Follow us