sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் - சொல்கிறார் ரவீந்திரநாத் தாகூர்

/

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் - சொல்கிறார் ரவீந்திரநாத் தாகூர்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் - சொல்கிறார் ரவீந்திரநாத் தாகூர்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் - சொல்கிறார் ரவீந்திரநாத் தாகூர்


ADDED : மே 19, 2011 12:52 PM

Google News

ADDED : மே 19, 2011 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். மனிதன் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற முயற்சிக்க வேண்டும்.

* நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும், நீ ஒருவரைத் திட்டினால், ஏமாற்றினால் உன்னையே திட்டியதும் ஏமாற்றிக் கொண்டதும் ஆகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல. இறைவன் எல்லா அன்பு மனங்களுக்குள்ளும் வசிக்கின்றான்.

* நேர்மையுள்ளவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியும், ஆனால், தவறு செய்கிறவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் எப்போதும் நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

* பேச்சுத்தூய்மையுடன் இருப்பதுடன், ஆணவத்தையும், தன்னைப் பற்றிப் பெருமையாக பேசுவதையும் விட்டுவிடுபவன் உண்மையில் நற்பெயரை பெறுகிறான்.

* இறைவன் ஒருவனால் மட்டுமே இருள்படர்ந்த இடத்திலும் நமக்கு நம்பிக்கை ஒளியை உறுதியாகத் தர முடியும்.

* முன்னேற்றத்திற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும், நமது கவனம் நம்மைக் காட்டிலும் பிறர் மீது தான் இருக்க வேண்டும்.

* கூட்டம் கூடுவது எளிதான செயல், ஆனால், ஒன்றுபடுவது தான் கடினம், உழைப்பும், தியாகமும் சேர்ந்தால் தான் இந்த ஒற்றுமையுணர்ச்சி பிறக்கும்.

* மண் வெட்டுகிறவனிடமும், கல் உடைக்கிறவனிடமும் கடவுள் இருக்கிறார். இவர்கள் நனையும் மழையிலும், காயும் வெயிலிலும் கடவுள் இவர்களோடு ஐக்கியமாகிறார்.

* நல்லது செய்ய விரும்புகிறவன் எப்போதும் பிறரது வாசல் கதவைத் தட்டுகிறான். ஆனால், அன்பு செலுத்துபவனுடைய வீடுகளில் வாசல் கதவு நிச்சயமாகத் தட்டுபவர்களுக்குத் திறந்தே உள்ளது.

* நாம் எதை அடைய ஆசைப்படுகிறோமோ அதை அடைய இந்த உலகம் நமக்கு மிகவும் உதவி செய்து கொண்டிருக்கிறது.

* இறைவன் பெரிய அரசாங்கங்களை வெறுத்து ஒதுக்குகிறான், ஆனால், சின்னஞ் சிறியமலர்களை ஒரு போதும் வெறுப்பது கிடையாது.

* மனித குலம் காலம் காலமாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வாழ்க்கை முறை ஆன்மிக வாழ்வு முறையேயாகும்.

* எவருடைய புகழ் உண்மைக்கு அப்பாற்பட்டு பளிச்சிடுகிறதோ அவனே பெருமைக்கு உரியவன் ஆகிறான்.

* தவறுகளை நாம் எப்போதும் மறைத்துவிட கூடாது, இதனால் உண்மையின் கதவுகள் அடைப்பட்டுப் போய்விடும்.

* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது, அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டும் இறைவனை அடைய முயற்சிப்பது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்.

* உன்னைவிட அனைத்து வழிகளிலும் உயர்ந்தவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் கூறும் அளவுக்கு அகங்காரம் கொள்ளக்கூடாது.

* தவறுகள் என்ற வாய்க்காலின் வழியாகவே உண்மை என்ற நீரோடை பாய்ந்து செல்கிறது.

* பெண்களின் மகிழ்ச்சி வீட்டிலுள்ள கவலைகளை அகற்றுகிறது, இதனால் பெண்களின் அன்பு அனைத்து வீடுகளிலும் இறைவனின் அருளாக உள்ளது.






      Dinamalar
      Follow us