sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை - உருக்கமாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணானந்தர்

/

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை - உருக்கமாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணானந்தர்

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை - உருக்கமாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணானந்தர்

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை - உருக்கமாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணானந்தர்


ADDED : ஜூன் 03, 2011 10:14 AM

Google News

ADDED : ஜூன் 03, 2011 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் அனைவரும் கடவுளுக்கு நம்பிக்கையான தொண்டர்களாக இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்தவர்களை நலம் மிகுந்தவர்களாகவும், மேம்பட்டவர்களாகவும் மாற்ற வேண்டும்.

* உன் மனம் வெளிப்புறமாகச் சென்றால் உன்னை உலகத்தின் பக்கமாக அழைத்துச் செல்லும். எனவே மனதை உனக்குள்ளேயே திருப்பு. அவ்வாறு செய்தால், நீ கடவுளின் பக்கம் செல்வாய்.

* மனம் எப்போதும் மிகவும் உயர்ந்ததையே விருப்பத்துடன் நாடுகிறது. அவ்வாறு தேடப்படும் பொருள் உலகிலுள்ள ஏதோ ஒன்றாக இருக்கக்கூடாது. கடவுள் என்னும் <உயரிய பொருளாக இருந்தால் மனம் பக்குவப்படும்.

* நியாயமும், ஒழுக்கமும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டுமானால், அனைத்துக் குணங்களிலும் சிறந்த மனிதர்களின் வாழ்க்கையைப் படித்து அதன்படி நடக்க வேண்டும்.

* ஒரு நாட்டிலுள்ள மக்கள் கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தருவதற்குப் பதிலாக மனஓட்டத்திற்கு முக்கியத்துவம் தந்தால், அந்நாட்டின் வீழ்ச்சி மிக அருகாமையில் உள்ளது என்பதை உணரலாம்.

* வறுமை, அறியாமை மற்றும் தோல்வியை எதிர்த்து மனிதன் போராட வேண்டும். உலகில் ஒவ்வொரு செயலும் போராட்டமாகவே உள்ளது. எனவே, இன்பத்தையும் துன்பத்தையும், லாபத்தையும், நஷ்டத்தையும் வெற்றியையும், தோல்வியையும் சமமாக நினைக்க வேண்டும்.

* கடவுளிடம் நம்பிக்கை வைப்பது தான் மனிதனை மேம்படுத்தும். அவனை நலமடையச் செய்யும். நியாயத்தின் பக்கம் நிற்கச் செய்யும்.

* நீ தூய்மையானவனா, எத்தகைய செயலையும் செய்யும் முழுமையான திறமை படைத்தவனா என்பதை, உன்னை உணர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள். அவ்வாறு அல்லாமல், உன்னை நீயே பெரியவனாக எண்ணிக்கொண்டால், அது வெறும் கற்பனையாகத் தான் இருக்கும்.

* உள்ளம் என்ற ஆமை, உண்மையை ஊமையாக்கி நடக்க ஆசைப்படுகிறது. நாம் உண்மையை பொய்யென்றும், பொய்யை உண்மை என்றும் தவறாகக் கருதுவதால் தான், வாழ்க்கை துன்பமும், கவலையும் நிறைந்ததாகத் தோன்றுகிறது.

* உலகம் அலங்காரம் செய்யப்பட்ட வரவேற்புக் கூடம் இல்லை. அது மிகப் பெரிய போர்க்களம். இங்கு, மிகப் பழமையான காலத்திலிருந்தே இயற்கைக்கும் மனிதனுக்குமிடையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது குறித்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

* இறைவனிடம் அன்பு செலுத்தினால் அவருடைய சாயலாக மாறுவோம், அவரைப் போலவே பரிசுத்தமாகவும், மகிமை கொண்டவர்களாகவும் ஆவோம்.

* தெய்வநிலைக்கு நம்மை அழைத்து செல்வது பக்திமார்க்கம், இதைவிடச் சிறந்ததும், எளிதாகப் பின்பற்றக் கூடியதுமான மார்க்கம் வேறு எதுவும் இல்லை.

* தன்னலமற்ற தூய இறையன்பிலும், இறைத் தொண்டிலும் நாம் வளர வேண்டும். இதுவே வாழ்க்கையின் மிக உயர்ந்த லட்சியம். சமயச்சடங்குகளைவிடவும், வழி பாட்டு முறைகளை விடவும், கடவுளை உணர்வதே முக்கியமாக அமைய வேண்டும்.






      Dinamalar
      Follow us