/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புத்துணர்ச்சி தரும் படாமகாதேவ் கோயில்
/
புத்துணர்ச்சி தரும் படாமகாதேவ் கோயில்
ADDED : ஜூன் 09, 2023 09:40 AM

தொழிலில் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டவர். முதலாளிக்கு தெரியாமலே எதிராக தொழில் தொடங்குவர்.
இப்படி பட்டவர்களை பார்த்து 'வரம் கொடுத்தவர் தலையிலேயே கைய வச்சுட்டான்' என சொல்வதுண்டு.
பஸ்மாசுரன் கதையை வைத்து இச்சொல் வந்தது. இது தொடர்பான கோயில் மத்தியபிரதேசம் பச்மார்கியில் உள்ள சவுராகார்க் என்னும் மலை மீது உள்ளது. வாங்க அதுபற்றி தெரிஞ்சுக்கலாம்.
சிவபெருமானை நோக்கி தவமிருந்த பஸ்மாசுரன் சாகாத வரம் கேட்டான். பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்து தான் போக வேண்டும் என்பது நியதி. வேறு வரம் கேள் என்றார் சிவபெருமான்.'' யார் தலையில் நான் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை பெற்றான் அசுரன். உடனே சிவபெருமானையே சோதிக்க விரும்பினான்.
அவனை புரிந்து கொண்ட சுவாமியும் கயிலாயம் நோக்கி ஓடினார். அசுரனும் சுவாமியை தொடர்ந்தான். அவன் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக சுவாமியோ! கழுத்தில் இருந்த பாம்பு, கையில் வைத்திருந்த சூலம் போன்றவற்றை தவிர்த்தார். அவர்களிடம் ஒளிந்து கொள்ள இடம் ஒன்றையும் ஏற்படுத்தச் சொன்னார். அவர்களும் மலை உச்சியில் ஒரு குகை ஒன்றை
உருவாக்கினர். இதற்கிடையில் மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அசுரனை
அழித்து சிவபெருமானை காத்தார். குகையில் அமர்ந்திருந்த சிவபெருமான் சுயம்புவாக லிங்கம் ஒன்றை நிறுவிய பின்னர் கயிலாயம் சென்றார். சுவாமியை தரிசிக்க பக்தர்கள் 1365 படிகள் ஏற வேண்டும்.
சடை விழுந்த இடம் ஜடாசங்கர் என்றும், நாகாபரணம் கழன்ற இடம் நாகமந்திர் என்றும், கங்கையை விட்ட இடம் குப்தகங்கை என்றும் அழைக்கப்படுகிறது. குகையில் விநாயகருடன் படாமகாதேவ் என்ற திருநாமத்தில் சிவபெருமான் அருள் செய்கிறார்.
மலையேறி அவரை தரிசனம் செய்தாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது.
சிவராத்திரி, நாகபஞ்சமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
எப்படி செல்வது: இந்துாரில் இருந்து 405 கி.மீ.,
விசேஷ நாள்: சிவராத்திரி, நாகபஞ்சமி
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 096914 19466
அருகிலுள்ள தலம்: உஜ்ஜயினி மஹா காலேஸ்வரர் கோயில் 390 கி.மீ.,
நேரம்: அதிகாலை 3:00 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 0734 - 255 0563

