sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ராணியின் பெயரில் சிவன்

/

ராணியின் பெயரில் சிவன்

ராணியின் பெயரில் சிவன்

ராணியின் பெயரில் சிவன்


ADDED : நவ 26, 2012 11:29 AM

Google News

ADDED : நவ 26, 2012 11:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்ரவல்லி என்னும் ராணியின் பெயரில், திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் பத்ரவல்லீஸ்வரர் கோயில் உள்ளது. ராணியின் வலிப்புநோயை குணப்படுத்திய இவரை வழிபட்டவருக்கு ஆரோக்கியம் மேம்படும். வலிப்பு, நரம்பு நோயால் அவதிப்படுபவர்கள் தரிசிக்க வேண்டிய தலம் இது.

தல வரலாறு:





புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் உண்டானது. பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் தீரவில்லை. இறுதியாக திருவீழிமிழலை வீழிநாதரை வணங்கி தன் நோய்தீர சிவனிடம் முறையிட்டாள். அன்றிரவு அவளுடைய கனவில் சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் தோன்றி, ''பத்ரவல்லீ! திருவீழிமிழலையில் உள்ள தீர்த்தத்தில் நீராடி என்னை வழிபட்டால் நோய் நீங்கி சுகம் பெறுவாய்!,'' என்று அருள்புரிந்தார். அதன்படி அவளும் தீர்த்தத்தில் நீராடி சுகம் பெற்றாள். வலிப்புநோய் தீர்த்த சிவனுக்கு ஆலயம் எழுப்ப பத்ரவல்லி விரும்பினாள். அவளின் எண்ணத்தை நிறைவேற்ற முதற்கடவுளான விநாயகரை வணங்கினாள். விநாயகர் பணமூடை கொடுத்து உதவினார். அந்த பணத்தில் வீழிநாதர் கோயிலுக்குத் தெற்கே, பத்ரவல்லி சிவனுக்கு கோயில் நிர்மாணித்தாள். பத்ரவல்லியின் பெயரால் இங்குள்ள இறைவன் 'பத்ரவல்லீஸ்வரர்' எனப்படுகிறார். அம்பிகைக்கு 'பத்ரவல்லியம்மன்' என்பது திருநாமம்.

வரலாறு:





மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் சிவனிடம், அதை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில், தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து

சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் 'கண்மலர்' காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்ராயுதத்தை கொடுத்தருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம். இறைவனே இறைவனை பூஜித்த காரணத்தால் இத்தலத்தில், தேவதச்சனான மயன் விண்விழி விமானத்துடன் கோயிலை நிர்மாணித்தான்.

மாப்பிள்ளை சுவாமி:





இங்கு காத்யாயன முனிவரின் மகளாக பார்வதி காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்தாள். அவளை மணம் முடிக்க முதியவர் வடிவில் சிவன் வந்தார். ஒரு முதியவருக்கு தன் மகளைக் கட்டிக்கொடுக்க முனிவர் தயங்கினார். அப்போது ஈசன், தன் நெற்றிக் கண்ணைக் காட்டியதும் வந்திருப்பது இறைவன் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். சித்திரை மகநாளில் சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது. இங்குள்ள சிவனை 'மாப்பிள்ளை சுவாமி' என்பர்.

சிம்மராசியினர் இவர்களைத் தரிசித்தால், திருமணத்தடை நீங்கி நல்ல துணை கிடைக்கும்.

வலி தீர்த்தம்:





இங்குள்ள தீர்த்தம் 'வலிதீர்த்தம்' எனப்படுகிறது. ஒரு பெரிய குளம் கேணி வடிவில் இங்குள்ளது. வலிப்பு, நரம்பு வியாதியால் அவதிப்படுபவர்கள், இங்கு நீராடி சிவனை வழிபட்டால் நோயின் தீவிரம் குறைவதோடு விரைவில் நோய் குணமாகும். இங்கு தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை என்பது மாறுபட்டது. சிதிலமடைந்த இக்கோயில் திருப்பணி நடந்து முடிந்துள்ளது. நவ.30ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி கோயிலில், சுவாமி சந்நிதி முன் மணப்பந்தல் அமைக்கப்பட்டிருக்கும் என்பது சிறப்பு. அருகில் பிதுர் தீர்த்த தலமான செதலபதி ராமநாதர் கோயில். கூத்தனூர் சரஸ்வதி கோயில் ஆகியவை உள்ளன. ஆன்மிக சுற்றுலா சென்று வர ஏற்ற தலம்.

திறக்கும்நேரம்:





காலை 7-11, மாலை 6-7.30.

இருப்பிடம்:





கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் உள்ளது. அங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவீழிமிழலை.

போன்:





94440 25239, 98400 53289.






      Dinamalar
      Follow us