sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

முதுகைகாட்டி தோப்புக்கரணம் போடுங்க!

/

முதுகைகாட்டி தோப்புக்கரணம் போடுங்க!

முதுகைகாட்டி தோப்புக்கரணம் போடுங்க!

முதுகைகாட்டி தோப்புக்கரணம் போடுங்க!


ADDED : செப் 17, 2012 10:22 AM

Google News

ADDED : செப் 17, 2012 10:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் திருநெல்வேலியில் இருக்கிறது. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவம். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

உச்சிஷ்டகணபதி என்பதற்கு 'எச்சில் பட்ட விநாயகர்' என்பது பொருள். தூய்மையே தெய்வம் என்பது நம் கோட்பாடு. ஒருநாள் குளிக்காவிட்டாலும் வழிபாட்டுக்கு தகுதியற்றவர்களாக நம்மை எண்ணுகிறோம். தீட்டுப்பட்டவர் நம்மைத் தொட்டால் தற்காலிகமாக கெட்டு விட்டதாக நம்மை நாமே புறக்கணிக்கிறோம். தூய்மையாக இருப்பது அவசியம் என்றாலும் அசுசியான பொருட்களைக் கண்டு அருவருப்பது கூடாது. சுத்தம், அசுத்தம் இரண்டையும் கடந்து செல்வதே பக்குவநிலை.

பரந்த மனம் ஒருவனிடம் இருந்துவிட்டால் எங்கும் அழுக்கு இல்லை என்பதை உணரலாம். செடிக்கு மாட்டின் சாணம், மனித மலம் என அழுக்கே உணவாகிறது. அதுவே நம்மிடம் விளைபொருளாகத் திரும்பி வருகிறது. இயற்கை முழுவதும் இந்த நிகழ்வைக் காணலாம். அழுக்கை அழுக்காக கருதக் கூடாது என்பதை உச்சிஷ்ட கணபதி நமக்கு உணர்த்துகிறார்.

உணவு உண்டபின் எச்சில் இலையைத் தூர எறிகிறோம். அதை அழுக்காகப் பார்க்காமல் உச்சிஷ்ட கணபதியே எழுந்தருளியிருப்பதாக எண்ண வேண்டும். அழுக்கையும் இறைவனாகப் பார்க்கும் தகுதியுடையவர்களுக்காக எழுப்பப்பட்டது உச்சிஷ்ட விநாயகர் கோயில்.

முதுகைக் காட்டி தோப்புக்கரணம்:

மற்ற கணபதிகளுக்கு நேராக நின்று தோப்புக்கரணம் போடலாம். ஆனால், உச்சிஷ்ட கணபதிக்கு நேராக நின்று ஒரு வணக்கம் செலுத்தியபின், முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இட வேண்டும். முதுகைக் காட்டி தோப்புக்கரணமா? இது அலட்சியத்தின் அடையாளம் அல்லவா? ஐதீகத்திற்கு முரணானது அல்லவா என்று எண்ணத்தோன்றும். ஆனால், எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு முகம், முதுகு என்ற பேதம் கிடையாது. அதனால் தான், முதுகைக் காட்டி உச்சிஷ்டகணபதியை வணங்கும் வழக்கத்தை முன்னோர் உருவாக்கி இருக்கின்றனர். இந்தக்கோயிலில் பெரிய ராஜகோபுரம் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 8 - 11.30, மாலை 6 - இரவு 8.

இருப்பிடம்:

திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் திரும்பி ஒரு கி.மீ., சென்றதும், மேகலிங்கபுரம் திருப்பம் வரும். அங்கே கோயிலுக்குச் செல்வதற்கான வழிகாட்டி பலகை இருக்கிறது.

போன்:

94433 68596, 94431 57065.






      Dinamalar
      Follow us