sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவது நல்லதல்ல!

/

சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவது நல்லதல்ல!

சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவது நல்லதல்ல!

சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவது நல்லதல்ல!


ADDED : மார் 04, 2013 01:40 PM

Google News

ADDED : மார் 04, 2013 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அர்ப்பணிப்பு உணர்வுடன், வாழ்வை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட்டால் கவலைக்கு வழியில்லை. அவருடைய கருணை, எப்போதும் நம்மைக் காத்துக் கொண்டிருக்கும்.

* மிருகங்களைப் போல, கீழான உணர்ச்சிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருந்தால் வாழ்வு வீணாகிவிடும். மனிதப்பிறவி மகத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* மனதில் எப்போதும் அமைதி நிறைந்திருக்க வேண்டும். அது ஒன்றே மிகப் பெரிய செல்வம்.

* இன்பமோ, துன்பமோ இரண்டும் புறப்பொருள்களைச் சார்ந்தவை அல்ல. ஒருவரின் மனதைப் பொறுத்தே உண்டாகின்றன.

* வாழ்க்கையில் பிரச்னைகளை யாராலும் தவிர்க்க முடியாது. அவற்றை சவாலாக ஏற்று சமாளித்து, வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

* நூறு நன்மை செய்திருந்தும், ஒரு தீமை செய்து விட்டால் கூட, உலகம் உங்களைப் புறக்கணித்து விடும். நூறு தீமை செய்தவனும் வாழ்வில் ஒரு நன்மை செய்ய விரும்பினால் கூட கடவுள் அவனை ஏற்றுக் கொள்வார்.

* தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் எவ்வளவோ கஷ்டப்பட தயாராக இருக்கிறோம். ஆனால், அழியாத ஆனந்தம் தரும் கடவுளுக்காக நாம் ஒரு நிமிடம் கூட செலவழிக்கத் தயாராக இல்லை.

* சூரிய உதயத்திற்குப் பின் தூங்கும் வழக்கம் நல்லதல்ல. இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தினர் அனைவரும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிட பழக வேண்டும்.

* தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருப்பது நல்லது. முடிந்தால் வாரத்தில் ஒருநாள் மவுனவிரதம் மேற்கொள்ளுங்கள்.

* நம் உள்ளம் கோயில். அங்கிருக்கும் கடவுளுக்கு நல்ல எண்ணமே அர்ச்சனை மலர்கள். நல்ல சொல்லே பாமாலை. அன்பே அவர் விரும்பும் நைவேத்யம்.

* கோபம் வரும்போது நம் உடலின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் ஆற்றல் வெளியேறுகிறது என்ற உண்மையை உணர வேண்டும்.

* பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது நம் பலவீனம் அல்ல. அடக்கமும், பணிவும் மனிதனை நன்னெறிப்படுத்தும் பண்புகள்.

* தேவைகளைக் குறைத்துக் கொண்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கும், தர்மபணிகளுக்கும் செலவிட வேண்டும்.

* பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது. உணவாகவோ, உடையாகவோ கொடுக்கலாம்.

* பெண்கள் சமையலில் ஈடுபடும்போது நல்ல சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் தர வேண்டும். சமைத்தவர்களின் இயல்பு அதை உண்பவர்களுக்கும் பரவும் என்பதை மறத்தல் கூடாது.

* காலையும், இரவும் மிதமான உணவும், மதியம் தேவையான அளவும் உண்பது நல்லது. வயிறு நிரம்ப சாப்பிடுவது மந்தபுத்தியை உண்டாக்கும்.

* இன்று இல்லாவிட்டாலும், நாளையாவது பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குணம் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது. அதில் ஒருபோதும் குறைபாடு நேர்ந்து விடக் கூடாது.

அறிவுறுத்துகிறார் மாதா அமிர்தானந்தமயி






      Dinamalar
      Follow us