
* பொறுமையாக இருப்பதே வெற்றிக்கான வழி என்பதை அறிந்துகொள்.
* நமது பாரதத்தின் பெண்மையின் இலக்கணமாக இருப்பவர்கள் சீதை, சாவித்திரி, தமயந்தி.
* பலமின்மையே துன்பத்திற்குக் காரணம். நாம் பலவீனராக இருந்தால் கெட்டவராகிறோம்.
* ஒருவரிடம் பொய்யும், திருட்டும், கொலையும், பாவச்செயல்களும் இருப்பதற்கு காரணம் அவரது பலவீனமே.
* கடைசி மூச்சு உள்ள வரை பணி செய்து கொண்டே இரு.
* சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண உலக ஆசையில் மூழ்கி இருக்காதே.
* ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது.
* புறவாழ்க்கை, அக வாழ்க்கையில் கட்டுப்பாடுடன் நடந்துகொள்.
* பசியால் வாடுவோருக்கு முதலில் உணவிடுங்கள். பின் தத்துவ போதனைகளை செய்யலாம்.
* பிறரது பாராட்டு, விமர்சனத்தை கேட்டால், உன்னால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.
* ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பதே உண்மையான பெருமை.
* எப்போதும் பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பவனிடம் சேராதே.
* தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.
விவரிக்கிறார் விவேகானந்தர்