sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?

/

இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?

இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?

இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?


ADDED : பிப் 25, 2013 05:51 PM

Google News

ADDED : பிப் 25, 2013 05:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்கும், அவனது அடியார்களுக்கும் பணமுள்ளவர்கள் பொருள் வழங்க வேண்டும். ஏழைகள் அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

* வாழ்வில் துன்ப துயரங்களை அடைந்த பின்னர் தான் கடவுளைப் பலரும் தேடுகின்றனர். ஆனால், இளமையிலும், நன்றாக இருக்கிற காலத்திலும் இறைவனைத் தேடுபவனே பேறு பெற்றவன்.

* உங்கள் மனதில் குற்றம் இருப்பதாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நல்ல நினைவுகளை மனதில் இருத்திக்கொண்டால், இதற்கு அவசியமே இராது.

* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே அதிகரிக்கிறது.

* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க இயலாது.

* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.

* இந்த உலகம் இனிமையான தோட்டம். இங்கே இறைவனை நேசிப்பவனுக்கு கவலை கிடையாது. எப்போதும் இறைசிந்தனையில் இருப்பவன் எதற்கும் அஞ்சுவதில்லை. அவன் புண்ணியவானும் கூட.

* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.

* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.

* ஏதாவது ஒரு உயிருக்கு மகிழ்ச்சியை உன்னால் அளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.

* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.

* ஒரு பொருள் அற்பமாக இருந்தால் கூட, அதை இகழ்ந்து பேசக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் <உங்களை மதிக்கும். செய்கிற செயல் மிக அற்பமானதாக இருந்தால் கூட, அதையும் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.

* ஏதேனும் கஷ்டம் வந்து விட்டால், தனியே அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளை வேண்டுங்கள். அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு, உங்களுக்கு எல்லாவற்றையும் விளங்கும்படி செய்வான்.

* மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே, ஒருவன் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் நல்ல செயல்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்கென, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக் கூடாது.

* நமக்கு முக்கியமானது அன்பே. இதன்மூலமே குடும்பம் முன்னேற வழியிருக்கிறது.

* சந்தனத்தை தொட்டால் கை மணப்பது போல, இறைவனைத் தியானித்தால் மனம் மணக்கும்.

கேட்கிறார் சாரதாதேவியார்






      Dinamalar
      Follow us