ADDED : டிச 26, 2020 08:37 PM

* பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை. கடவுள் நினைத்தால் தான் எதுவும் கிடைக்கும்.
* குறிக்கோளைப் பற்றி ஆழ்ந்து யோசித்தால் விரைவில் அதை அடையலாம்.
* மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும்.
* உணவைக் கூட மறக்கலாம். தினமும் தியானம் செய்ய மறக்க கூடாது.
* கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் தியானம் செய்தால் நன்மை அடையலாம்.
* துணிகளை வெளுக்க வழியிருக்கிறது. ஆனால் மனம் வெளுக்க வழியில்லையே!
* மனதைக் கட்டுப்படுத்துங்கள். வேண்டாத விஷயங்களை அனுமதிக்காதீர்கள்.
* அன்பே சிறந்த தர்மம். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.
* உண்மையான அன்பு கொண்டவர் யார் மீதும் கோபம் கொள்வதில்லை.
* தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு துளி.
* அன்பு பொறுத்துக் கொள்ளும். அன்பிருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* பேச்சு, கொள்கை அளவில் அன்பிருந்தால் போதாது. செயலிலும் வெளிப்படுத்துங்கள்.
* கோபத்திற்கு ஆளாகும் மனிதன் தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொள்கிறான்.
* சிலையில் மட்டும் கடவுளைக் காணாதீர். எல்லா உயிர்களிலும் அவர் வாழ்கிறார்.
உறுதிபடச் சொல்கிறார் பாரதியார்