sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

காலம் பொன்னானது கடமை கண்ணானது

/

காலம் பொன்னானது கடமை கண்ணானது

காலம் பொன்னானது கடமை கண்ணானது

காலம் பொன்னானது கடமை கண்ணானது


ADDED : ஏப் 10, 2017 03:23 PM

Google News

ADDED : ஏப் 10, 2017 03:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. கிடைக்கும் நேரத்தில் உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள்.

* மண்ணில் நட்ட விதை பயிராக வளரும் என்ற நம்பிக்கை இருப்பது போல, கடவுளையும் நம்பிக்கையுடன் வணங்கினால் எதிர்கால வாழ்வு நன்மையாக அமையும்.

* பிறரை வணங்குவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக, நம் ஆணவ எண்ணம் குறையும்.

* கருவறையில் கடவுளைக் காண்பதால் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மையான பக்தி.

* சுயநலத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால், கடவுள் ஆயிரம் அடி விலகிச் சென்று விடுவார்.

* கிணற்றில் விழ ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால், அங்கிருந்து எழுந்து வர பல மணி நேரம் போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.

* பாயும் நீரை ஓரிடத்தில் அணையில் தேக்கினால் விவசாயம் செய்யலாம். அது போல சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளின் அருளைப் பெறலாம்.

* நமது வாழ்வை ஆக்கவழியில் பயன்படுத்தாமல், அழிவு வழியில் பயன்படுத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார்.

* இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைக் காக்கும் ஒரே நண்பன் கடவுள் மட்டுமே.

* சாஸ்திரத்தை படிப்பதால் பயனில்லை. அதைப் பின்பற்ற வேண்டும். வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டட வரைபடத்தில் யாரும் குடியிருக்க முடியாது.

* ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும். பக்தி மட்டும் நிலைக்கும்.

* புயலில் மரம் சாயும். கட்டடங்கள் இடிந்து போகும். ஆனால், புல் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். இந்தப்பணிவை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

* கரும்பின் சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை எறிவது போல, நண்பர்களிடம் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு தீமையைத் தள்ளி விடுங்கள்.

* வரைபடம் இருப்பவனுக்கு வாகனப் பயணம் சுலபமாகும். தர்ம சாஸ்திரங்களின் உதவி இருந்தால் வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.

* கடவுளின் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் தொலையும். மனம் சுத்தமாகும். வலை பின்னும் சிலந்தி போல எங்கிருந்தாலும் மனதால் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.

* பிறர் மீதுள்ள குறைகளை பொருட்படுத்தாமல் அவரிடமுள்ள நற்குணங்களை மட்டும் காண முயல வேண்டும்.

சொல்கிறார் அமிர்தானந்தமயி






      Dinamalar
      Follow us