/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நேற்று போல் இன்று இல்லை! இன்று போல் நாளை இல்லை!!
/
நேற்று போல் இன்று இல்லை! இன்று போல் நாளை இல்லை!!
ADDED : செப் 07, 2018 03:37 PM

* நேற்று போல் இன்று இல்லை; இன்று போல் நாளை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்.
* கவலை, பயம் இரண்டிற்கும் உள்ளத்தை இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
* உலகமே கண்டு வியக்கும் விதத்தில் நன்மை கிடைக்க விரும்பினால் அதற்கு பக்தி ஒன்றே சிறந்த வழி.
* அறிவிலும், செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.
* எல்லா சாஸ்திரங்களும் சொல்வது ஒரே உண்மையைத் தான். ஆனால் எல்லோருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
* அன்பை விடச் சிறந்த குணம் வேறில்லை. அன்பு உள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும்.
* உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தி.
* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாவற்றையும் மாற்றும் வலிமை அதற்குண்டு.
* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.
* உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளவே கூடாது.
* வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.
* உள்ளத்தில் நேர்மை, தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேரானதாகவே இருக்கும்.
* எப்போதும் பாடுபடு. உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.
* தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம்.
* மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்.
* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் தலைமையானது பொறுமை.
* பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்தால் மனிதன் கடவுளுக்கு நிகராவான்.
* எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றும் சக்தி மனிதனுக்கு கிடையாது.
* எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு ஒன்றே. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெற முடியும்.
* படிப்படியான வளர்ச்சி என்றும் நிலைத்திருக்கும். வேகமான வளர்ச்சி, சென்ற வேகத்தில் கீழே தள்ளி விடும்.
* பொருள் படைத்தவன் சமத்துவ எண்ணத்தைப் பெற்று விட்டால் உலகமே சீர் பெற்று விடும்.
தெளிவு படுத்துகிறார் தேசியக்கவி