sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சந்தோஷிமாதாவே வருக!

/

சந்தோஷிமாதாவே வருக!

சந்தோஷிமாதாவே வருக!

சந்தோஷிமாதாவே வருக!


ADDED : அக் 23, 2010 01:09 AM

Google News

ADDED : அக் 23, 2010 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகருக்கும், சித்தி புத்திக்கும் லாபம், சுபம் என்ற பிள்ளைகள் இருந்தார்கள். ஒருமுறை ரக்ஷாபந்தன் விழாவின் போது, அவரவர் சகோதரிகளுக்கு ரக்ஷை கட்டுவதைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு சகோதரி  வேண்டுமென விநாயகரை வேண்டினர். அவர்களைச்   சந்தோஷப்படுத்த பிறந்தவளே சந்தோஷிமாதா. சகோதர உறவுக்குரிய தெய்வம் இவள். சகோதர உறவு நிலைத்திருக்கவும், விரைவில் திருமணம் கைகூடவும் சந்தோஷிமாதா 108 போற்றியை மாலை வேளையில் விளக்கேற்றியதும் பாடுங்கள்.

சந்தோஷிமாதாவே போற்றி

சகலமும் அருள்வாய் போற்றி

வேதங்கள் துதிப்பாய் போற்றி

வெற்றிகள் தருவாய் போற்றி

கன்னியிற் சிறந்தாய் போற்றி

கற்பகத்தருவே போற்றி

கருணைக்கடலே போற்றி

காரணத்தின் உருவே போற்றி

காரியமும் ஆனாய் போற்றி

காசித்தலம் உறைவாய் போற்றி

கதை கேட்டு மகிழ்வாய் போற்றி

காலதேசம் கடந்தாய் போற்றி

கஜமுகன் குழந்தாய் போற்றி

முக்குண <உருவே போற்றி

மூவுலகிற் சிறந்தாய் போற்றி

இனியதின் உருவே போற்றி

இனிப்பினை விரும்புவாய் போற்றி

வாட்டமிலா முகத்தாய் போற்றி

வரம் மிகத்தருவாய் போற்றி

அகர முதல எழுத்தே போற்றி

ஆதி அந்தமில்லாய் போற்றி

ஈடிணையற்றாய் போற்றி

இணையடி தொழுதோம் போற்றி

கோரியது கொடுப்பாய் போற்றி

குலம் காக்கும் சுடரே போற்றி

விரதத்திற்கு உரியாய் போற்றி

விளக்கத்தின் விளக்கமே போற்றி

ஆனைமுகத்தான் மக@ள போற்றி

ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி

பெருவாழ்வு அருள்வாய் போற்றி

பிழைகளைப் பொறுப்பாய் போற்றி

வணக்கத்திற்குரியாய் போற்றி

வணங்கினால் மகிழ்வாய் போற்றி

உயர்வுகள் தருவாய் போற்றி

கோள்களும் போற்றும் போற்றி

குறைகளைத் தீர்ப்பாய் போற்றி

நிறைவினைத் தருவாய் போற்றி

நித்தமும் அருள்வாய் போற்றி

சக்தியின் <உருவே போற்றி

சரஸ்வதி ஆனாய் போற்றி

திருமகள் வடிவே போற்றி

தெய்வத்தின் தெய்வம் போற்றி

குலம் தழைக்க அருள்வாய் போற்றி

வாசனை மலரணிந்தாள் போற்றி

தீமைகளை அழிப்பாய் போற்றி

திசைகளெட்டும் நிறைந்தாய் போற்றி

அற்புத உருவே போற்றி

ஆனந்த நிலையே போற்றி

தாமரை முகத்தவளே போற்றி

தர்மத்தின் வடிவே போற்றி

தாயாக வந்தாய் போற்றி

தக்கவர்க்கு பொருளருள்வாய் போற்றி

நினைத்ததை முடிப்பவளே போற்றி

நிம்மதி அருள்வாய் போற்றி

உமையவள் பேத்தியே போற்றி

உன்னதத் தெய்வமே போற்றி

செல்வத்தின் உருவமே போற்றி

ஜெகமெல்லாம் காப்பாய் போற்றி

உயிருக்கு உயிரானாய் போற்றி

உலகமெல்லாம் நிறைந்தவளே போற்றி

ஆபரணம் அணிந்தாய் போற்றி

ஆடைகள் தருவாய் போற்றி

ஒளிமிகு முகத்தாய் போற்றி

ஓம்காரப் பொருளே போற்றி

கருணைசேர் கரத்தாய் போற்றி

மங்களம் தருவாய் போற்றி

உன்னையே துதித்தோம் போற்றி

உடமைகள் தருவாய் போற்றி

நங்கையர் நாயகியே போற்றி

நலமெலாம் தருவாய் போற்றி

ஆரத்தி ஏற்பாய் போற்றி

ஆனந்த உருவே போற்றி

பாடல்கள் கேட்டாய் போற்றி

பாசத்தைப் பொழிவாய் போற்றி

குணமெனும் குன்றே போற்றி

குங்குமம் தருவாய் போற்றி

தேவியர் தேவியே போற்றி

சிவனருள் பெற்றாய்  போற்றி

சிறப்பெலாம்கொண்டாய் போற்றி

விஷ்ணுவரம் பெற்றாய் போற்றி

விண்ணவர் செல்வமே

போற்றி

நலன்களின் <உருவமே

போற்றி

புண்ணிய நாயகி

போற்றி

செல்வத்தின் வடிவே

போற்றி

செல்வத்தைப் பொழிவாய்

போற்றி

சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி

சற்குணவதியே போற்றி

ஐங்கரன் மகளே போற்றி

அனைத்துமே நீ தான் போற்றி

கண்ணுக்கு இமையே போற்றி

கருணை செய்து காப்பாய் போற்றி

கனகமாமணியே போற்றி

கல்வியெலாம் தருவாய் போற்றி

சித்திபுத்தி செல்வமே போற்றி

சிறப்பெலாம் அருள்வாய் போற்றி

தத்துவச் சுடரே போற்றி

தக்கவர்க்கு பொருள் அருள்வாய் போற்றி

வித்தகச் செல்வியே போற்றி

வினைகளெலாம் களைவாய் போற்றி

பழங்களை ஏற்பாய் போற்றி

பாயாசம் உண்பாய் போற்றி

கரும்பாய் இனிப்பாய் போற்றி

காமதேனு பசுவே போற்றி

குடும்ப விளக்கே போற்றி

கொலுவிருந்து அருள்வாய் போற்றி

சந்தோஷம் தருவாய் போற்றி

சவுபாக்கியம் அருள்வாய் போற்றி






      Dinamalar
      Follow us