sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நான்கு கால அபிஷேகத்தில் என்ன நடக்கிறது?

/

நான்கு கால அபிஷேகத்தில் என்ன நடக்கிறது?

நான்கு கால அபிஷேகத்தில் என்ன நடக்கிறது?

நான்கு கால அபிஷேகத்தில் என்ன நடக்கிறது?


ADDED : பிப் 09, 2018 11:40 AM

Google News

ADDED : பிப் 09, 2018 11:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவராத்திரியன்று இரவில், சிவலிங்கத்துக்கு நான்கு ஜாம அபிஷேகம் நடக்கும் முறை தெரியுமா?

முதல் ஜாமம் : பஞ்ச கவ்ய அபிஷேகம். சந்தன பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம் மற்றும் அர்ச்சனை.

பச்சைப் பயிறு பொங்கல் நிவேதனம். ரிக் வேத பாராயணம்.

இரண்டாம் ஜாமம் : சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம். பச்சைக் கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல். துளசி அலங்காரம், வில்வத்தால் அர்ச்சனை.

பாயசம் நிவேதனம். யஜுர் வேத பாராயணம்.

மூன்றாம் ஜாமம்: - தேன் அபிஷேகம். பச்சை கற்பூரம் சார்த்துதல். மல்லிகை அலங்காரம். வில்வ அர்ச்சனை.

எள் அன்னம் நிவேதனம். சாம வேத பாராயணம்.

நான்காம் ஜாமம்: - கருப்பஞ்சாறு அபிஷேகம். நந்தியாவட்டை மலர் சார்த்துதல். அல்லி, நீலோற்பவம், நந்தியாவர்த்த அலங்காரம் மற்றும் அர்ச்சனை.

சுத்தான்னம் நிவேதனம். அதர்வண வேத பாராயணம்.

மகா சிவராத்திரி பாடல்கள்

சிவராத்திரியன்றைய தினத்தில், ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தை படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும். நோய் அகன்று நலம் பெறலாம். சகல மங்களங்களும் உண்டாகும். இதில் எட்டு ஸ்லோகங்கள் உள்ளன.

''பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் வணங்கப்படுவதும், பிரகாசமானதும், அழகுள்ளதும், துக்கத்தைப் போக்குவதும், எப்போதும் மங்கலத்தை அருள்வதுமான மகாலிங்கத்தை போற்றுகிறேன்...'' என சொல்லி விட்டு, இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதிலுள்ள முக்கிய ஸ்லோகமும், அதன் பொருளும் தரப்பட்டுள்ளது.

கனகமஹாமணிபூஷித லிங்கம்

பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்

தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள்: தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், நாகத்தால் சுற்றப்பட்டதும், தட்சனின் யாகத்தை நாசம் செய்ததும், மங்கள நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதுமான மகாலிங்க மூர்த்தியை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us