sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நிஜமான சந்தோஷம் எது ? - தயானந்த சரஸ்வதி சொல்கிறார்

/

நிஜமான சந்தோஷம் எது ? - தயானந்த சரஸ்வதி சொல்கிறார்

நிஜமான சந்தோஷம் எது ? - தயானந்த சரஸ்வதி சொல்கிறார்

நிஜமான சந்தோஷம் எது ? - தயானந்த சரஸ்வதி சொல்கிறார்


ADDED : டிச 24, 2010 03:33 PM

Google News

ADDED : டிச 24, 2010 03:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் ஒருவரே. அவர் எல்லாம் அறிந்தவர், ஒளி மிகுந்தவர். அஞ்ஞானமே துளி கூட இல்லாதவர். அவரை தியானிப்போம். வணங்குவதற்கு உரியவரும், சர்வ வல்லமையுடையவரும், பேரறிவு மிக்கவருமான கடவுளை நாம் முழு மனத்துடன் பிரார்த்திப்போம்.

* ஆசையை அறவே அழிக்க முடியாது; அழிக்கவும் தேவை இல்லை. 'எனக்கு ஆசை இருக்கின்றது' என்பது பிரச்னை அல்ல. ஆசைக்கு அடிமையாகிவிட்டால் தான் ஆபத்து வந்து சேரும். * தானாகவே மனதில் எழும் எண்ணங்கள் வேண்டாதவைகளை எல்லாம் தேடிக் கொண்டு போகும். அந்த எண்ணங்களை வளர்த்துக் கொண்டே போனால் இறுதியில் அவை நம்மை துக்கத்தில் தள்ளிவிடும்.

* மாறி மாறித் தீர்வுகளை எடுப்பதே வாழ்க்கை. கலக்கமற்ற தெளிந்த மனத்தினால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். எனவே தெளிவான மனத்தைப் பெற இறைவனைப் பிரார்த்திப்பது மிகவும் அவசியம்.

* சந்தோஷத்தை யாவரும் நாடுகின்றனர். ஆனால், முழுமையான இன்பம் என்பது கடவுளை உணர்வது மட்டுமே. தெரிந்தோ தெரியாமலோ இறைவனை சிந்திக்கும் ஒவ்வொரு முறையும் நாம் மேலான இன்பத்தையே அடைய முயன்று கொண்டு இருக்கிறோம்.

* நம்மைப் விடப் பல மடங்கு பெரிதாக உள்ள பரம்பொருளுக்கு நம்பிக்கையால் அன்றி பகுத்தறிவால் சரணடைய வேண்டும். இதனால் நம் பணிச்சுமை குறைந்து, பரம்பொருளின் விருப்பத்திற்கு பாத்திரமாகி விடுகிறோம். அதனால் நம் வாழ்க்கையும் மிக எளிதானதாகிவிடும்.

* சண்டைக்குக் காரணமாக இருக்கும் மன வேறுபாட்டை, அன்பு நீக்கிவிடும். போட்டி மிகுந்த இந்நாளில் களங்கமற்ற அன்பைக் காண்பது அரிதாகிவிட்டது. அம்மாதிரி அன்பு இல்லாமல் வாழ்க்கையில் பயனுள்ள எதையுமே சாதிக்க முடியாது.






      Dinamalar
      Follow us