sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

16-30 வயது வரை கடுமையாக உழையுங்கள்

/

16-30 வயது வரை கடுமையாக உழையுங்கள்

16-30 வயது வரை கடுமையாக உழையுங்கள்

16-30 வயது வரை கடுமையாக உழையுங்கள்


ADDED : ஏப் 25, 2016 01:43 PM

Google News

ADDED : ஏப் 25, 2016 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்களுக்கு பதினாறில் இருந்து முப்பது வயது வரையில் உள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் கடுமையாக உழைத்துப்போராடி, லட்சியத்தை அடைய வேண்டும்

* நாடு, மொழி, இனம், பொருளாதார நிலை இவற்றிற்கு தீங்கு நேரும் வகையில், எந்த சூழ்நிலையிலும் விரும்பத்தகாத செயல்களில்

ஈடுபடாதீர்கள்.

* அறிவின் உச்சகட்டமே அன்பு; கல்வியின் உச்சநிலை நல்ல குணாதிசயம் ஆகும்

* மாணவர்களுக்கு நல்ல குணங்களைக் கற்றுத்தருவதும், தகுதியானவராக மாற்றித் தருவதுமே கல்வி கற்பித்தலின் அடிப்படை ஆகும்

* மனிதர்கள், பக்தியின் ஒரு அங்கமாகத்தான் இருக்க வேண்டும். எந்த செயலையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்த வேண்டும்.

* உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து, பொழுது போக்குகளில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அதைக் கொண்டு பிறருக்கு சேவை செய்யுங்கள்.

* கடவுளே இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர். அவரே வாழ்க்கையின் பாதுகாவலராகவும், லட்சியமாகவும் இருக்கிறார்

* உங்களது செயல்பாடுகள், பக்திப்பூர்வமானதாகவும், பழத்தின் உள்ளிருக்கும் சதையை எடுத்து சாப்பிடுவதைப் போல பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்

* 'நான் பயமில்லாதவன்', 'நானே கடவுள்' என்று சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் யாராலும் வெல்ல முடியாதவராக வலிமை பெறுவீர்கள்

* குழந்தைகள் தவறு செய்யும்போது மிகவும் கண்டிப்பு காட்டுங்கள். அவர்கள் நற்செயல் செய்யும்போது, வாய்விட்டு புகழ்ந்து பேசுங்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பாதையில் செல்லும் வழிகாட்டியாக அமையும்

* லட்சியத்தை அடையும் வரையில் துவண்டு போவதும், அதிலிருந்து பின் வாங்குதலும் கூடாது.

* விண்வெளிக்குச் சென்று நிலவிலும் கால் வைத்து விட்டவர்களுக்கு, பக்கத்து வீட்டினருடன் இணக்கமாக இருக்கத் தெரிவதில்லை. அயல்வீட்டாருடன் ஒற்றுமையாய் இருங்கள்.

* கடவுளை அடைவதையே, உங்களது லட்சியமாகக் கொண்டு வாழுங்கள். அவருக்கு வெளியில் விளக்கேற்றி வழிபடுவதை விட,

மனதிற்குள் விளக்கேற்றி வழிபடுவதுதான் சிறந்தது.

* உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வரைமுறை வைத்துக்கொள்வது தவறான செயல். இவ்வாறு செய்வது தன் சொந்த பெற்றோரையே

அவமரியாதை செய்ததற்குச் சமம்.

* சாப்பிடும் உணவானது, அதற்கான வகைகளை வாங்கியவர், சமைத்தவர் மற்றும் பரிமாறியவர் ஆகியோரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கும்

* பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், உணவிற்காக தரையிறங்கத்தான் வேண்டும். நீங்களும் எவ்வளவு உயர்ந்தாலும் பணிவுடன் இருங்கள்.

* உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே, மனிதன் மேன்மையான நிலை பெற முடியும்.

நல்வழி காட்டுகிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us