ADDED : ஜூலை 29, 2016 10:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞான சம்பந்தரும், அப்பரும் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும், திறந்த கதவு மீண்டும் அடைக்கவும் பாடிய தலம் வேதாரண்யம். இங்கு வேதாரண்யேஸ்வரரும், அம்பிகை யாழைப்பழித்த மொழியாளும் அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சிஅளித்த தலம். இங்கு கருவறையில் அணைய இருந்த தீபம், அதிலிருந்த நெய்யைக் குடிக்க வந்த எலியின் உடல் பட்டு தூண்டப் பெற்றது. அதன் பயனாக எலி, மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் பாக்கியம் பெற்றது. இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் கங்கை, யமுனை போன்ற நதி தெய்வங்கள் நீராடி பாவம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். கோவிலின் எதிரிலுள்ள கடலுக்கு வேத தீர்த்தம் என்று பெயர். இதற்கு 108 பெயர்கள் உண்டு. ஆடி அமாவாசையில் இங்கு முன்னோர் வழிபாடு நடக்கிறது.