ADDED : ஜூலை 29, 2016 10:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருப்பள்ளி முக்கூடல். மூர்க்க மகரிஷி சிவனை பூஜித்த தலம் இது. இங்குள்ள சிவன் முக்கண்நாதர் என்றும், முக்கூடல்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள முக்கூடல் தீர்த்தத்தில் ஆடி அமாவாசையன்று நீராடினால் காசி, கங்கை, ராமேஸ்வரம் ஆகிய மூன்றிலும் நீராடிய புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். பேச்சுவழக்கில் இத்தலத்தை 'குருவி ராமேஸ்வரம்' என்று குறிப்பிடுவர்.
ராமேஸ்வரத்தில் நீராடியது போல பதினாறு மடங்கு புண்ணியம் தரும் என்பதால் இத்தலத்திற்கு 'சோடஷ சேது' என்றும் பெயருண்டு. 'சோடஷ' என்றால் பதினாறு. திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற இங்கு தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் தீரும் என்பர்.