ADDED : ஏப் 29, 2022 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசியில் டுண்டி ராஜகணபதிக்கு கோயில் உள்ளது. 'டுண்டி' என்ற சொல்லுக்கு 'தொந்தி' எனப் பொருள்.
பெருவயிறு கொண்டவர் என்பதால் இவர் தொந்தி கணபதி ஆகிறார். அந்த 'டுண்டியே' தமிழில் 'தொண்டி' என திரிந்திருக்க வேண்டும் என்பர். இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டியில் விநாயகர் கோயில் உள்ளது. தொண்டி கடலில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்ட ராமர் வந்த போது, 'இங்கு கட்டுவதை விட ராமேஸ்வரத்தில் இருந்து பாலம் கட்டினால் இலங்கை செல்வது எளிது' என விநாயகர் வழிகாட்டினார். ராமபிரானின் வெற்றிக்கு துணை நின்ற இவரை வணங்கினால் வாழ்வில் குறுக்கிடும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

