sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சதுர்த்தியன்று விநாயகரை வணங்க எளிய ஸ்லோகம்

/

சதுர்த்தியன்று விநாயகரை வணங்க எளிய ஸ்லோகம்

சதுர்த்தியன்று விநாயகரை வணங்க எளிய ஸ்லோகம்

சதுர்த்தியன்று விநாயகரை வணங்க எளிய ஸ்லோகம்


ADDED : ஆக 26, 2011 09:53 AM

Google News

ADDED : ஆக 26, 2011 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது முடியாவிட்டால் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட எளிய ஸ்லோகம் ஒன்றைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

''ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!

பொருள்: ஸுமுகன் (அழகிய முகம் உடையவர்), ஏகதந்தன் (ஒற்றைத் தந்தம் உடையவர்), கபிலர், கஜகர்ணர் (யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர்), லம்போதரர் (பெருவயிறு உடையவர்), விகடர்(யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்), விக்னராஜர் (தடைகளை நீக்குபவர்), விநாயகர்(தெய்வங்களில் முதல்வர்), தூமகேது (அழகானவர்), கணாத்யேக்ஷர்(தேவகணங்களுக்கு அதிபதி), பாலசந்திரர்( பிறைநிலா அணிந்தவர்), கஜானனர்(யானை முகம் கொண்டவர்), வக்ரதுண்டர்( வளைந்த துதிக்கை உடையவர்), சூர்ப்பகர்ணர் (அகன்ற காதுகளை உடையவர்), ஹேரம்பர்( ஐந்துமுகம் கொண்டவர்), ஸ்கந்தபூர்வஜர்(கந்தனுக்கு முன் பிறந்தவர்).






      Dinamalar
      Follow us