ADDED : ஜூன் 25, 2026 11:09 AM

அ நிறம் | அளவு
கடவுள், தேவர்களை திருப்தி செய்ய யாகம் செய்கிறோம். இதில் இடம்பெறும் நெய், வஸ்திரம் போன்ற திரவியங்களை (அவிர்பாகம்) தேவலோகத்திற்கு சேர்க்கும் பொறுப்பு அக்னிபகவானுக்கு உரியது.
யாகத்தில் நெய் சேர்ப்பதால் ஒரு சமயம் அக்னிக்கு அஜீரணம் ஏற்பட்டது. நோய் குணமாக வேண்டும் என மகாவிஷ்ணுவை வழிபடவே, அக்னியை நீராக அவர் மாற்றினார். குளிர்ச்சியால் குணம் அடைந்த அக்னி பூலோகத்தை வந்தடைந்தார். உத்தரகண்ட் மாநிலம், பத்ரிநாத்தில் 'உஷ்ண குண்டம்' என்ற பெயரில் உள்ள இக்குளத்தை வழிபட்டால் நோயின்றி வாழலாம்.
