sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆதி சங்கரர்

/

ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்


ADDED : மே 06, 2011 10:01 AM

Google News

ADDED : மே 06, 2011 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 8 சங்கர ஜெயந்தி

சங்கரர் - பெயர்க்காரணம்

ஞானபூமியான கேரளாவிலுள்ள காலடியில் தெய்வத்தம்பதியரான சிவகுரு, ஆர்யாம்பாள் சிவபெருமானிடம் குழந்தை வரம் கேட்டனர். சிவபெருமான் ஒருநாள் அவர்களுடைய கனவில் தோன்றி, ''பேர் சொல்ல பிள்ளை வேண்டுமா? அல்லது முட்டாளாக பலபிள்ளை வேண்டுமா?'' என்றார். ''இறைவா! உம் சித்தம் எம் பாக்கியம்'' என்று பதிலளித்தனர். ஒரு தெய்வீகக்குழந்தையை வைகாசி வளர்பிறை பஞ்சமியன்று ஆர்யாம்பாள் பெற்றெடுத்தார். சிவனின் திருநாமங்களில் 'மங்கலத்தை அருள்பவன்' என்னும் பொருளில் 'சங்கரன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஐந்துவயதில் உபநயனம் செய்வித்தனர். ஏழுவயதிற்குள் சங்கரர் வேதம், வேதாந்தம், புராணங்கள், காவியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

அம்மா கொடுத்த அனுமதி

காலடியில் இருந்த ஆற்றில் சங்கரரின் தாய் ஆர்யாம்பாளும், சங்கரரும் நீராடிக் கொண்டிருந்தனர். திடீரென, ''அம்மா! முதலை என் காலை கவ்வி விட்டதே!'' என்று கத்தினார் சங்கரர். அம்மா பதறிப் போய் நின்றார். ''தாயே! நீ என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,'' என சங்கரர் கதறினார். பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அம்மாவும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அந்த முதலை அழகான கந்தர்வனாக (தேவர் நிலைக்கு அடுத்த நிலையிலுள்ளவன்) மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.

ஜாதியில்லை பேதமில்லை

ஒருமுறை சங்கரரை புலையன் ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது.

மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், ''டேய், விலகிப்போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே,''நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலகவேண்டும்?'' என்று எதிர்கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. 'மநிஷா பஞ்சகம்' என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்.

தங்கமழை பொழிய வேண்டுமா?

ஆதிசங்கரர் குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் அன்றாடம் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்யம் செய்து உண்பது வழக்கம். ஒருமுறை, சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குப் புறப்பட்டார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டில் நின்று 'பவதி பிக்ஷõம் தேஹி' (எனக்கு பிச்சையிடுங்கள்) என்று அழைத்தார். பிச்சை எடுக்கும்போது, மூன்று முறை கூப்பிட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அதனால் மீண்டும் இருமுறை சப்தமிட்டார். வாசலை எட்டிப்பார்த்தாள் அந்தணரின் மனைவி. பால் வடியும் முகத்துடன் பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சை பாத்திரத்துடன் நின்றதைக் கண்டாள். ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை பிச்சைப்பாத்திரத்தில் இட்டாள். கணவனுக்கு கூட வைக்காமல், நல்ல மனதுடன் தர்மம் செய்த அவளது ஏழ்மை கண்டு கண்டு குழந்தை சங்கரரின் மனம் உருகியது. திருமகளை வேண்டி 'கனகதாராஸ்தவம்' பாடினார். அவர்களின் முன்வினைப் பாவம் தீர்ந்து முற்றம் எங்கும் தங்க நெல்லிக்கனிகள் சிதறி விழுந்தன. தனக்கென இல்லாமல் பிறர்க்கென வாழும் அனைவர் இல்லத்திலும் லட்சுமி கடாட்சத்தால் தங்கமழை பொழியும்.






      Dinamalar
      Follow us