ADDED : ஜூலை 14, 2016 10:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவத்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில், ஆடி மாதத்தில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது. இங்கு ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ராமர் பிரதிஷ்டை செய்த சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரை ராமநாதசுவாமி என்பர். இங்கு அருள்புரியும் பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாத சுவாமிக்கும் ஆடி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று இங்கு நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருவதாகும்.