sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்

/

பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்

பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்

பெருமாளை கண்டெடுத்த ஆதிவாசிகள்


ADDED : ஜூன் 03, 2011 10:12 AM

Google News

ADDED : ஜூன் 03, 2011 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், திருநாராயணபுரம் ஆகிய நான்கும் மண்டபத்தலங்களாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கம் போக மண்டபமாகவும், திருப்பதி புஷ்ப மண்டபமாகவும், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தியாக மண்டபமாகவும், கர்நாடகா திருநாராயணபுரம் நாராயணப்பெருமாள் கோயில் ஞான மண்டபமாகவும் திகழ்கிறது.

நாரதர், மைத்ரேயர், வியாசர், பிருகு, சாண்டில்ய மகரிஷி ஆகியோருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் ஞானம் வழங்கியதால் இத்தலம் ஞானமண்டபம் என்று போற்றப்படுகிறது. நாரதபுராணம், யாதவகிரி மகாத்மியம் ஆகியவற்றில் இத்தல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜர் கர்நாடகப்பகுதியில் தங்கி வைணவத்தைப் பரப்பினார். பிட்டிதேவராயன் என்னும் சமண மன்னனை விஷ்ணு பக்தனாக்கினார். அவன் 'விஷ்ணுவர்த்தன்' என்று தன் பெயரை மாற்றிக் கொண்டான். ராமானுஜர் இங்கு தங்கிய காலத்தில், நாராயணபுரத்திலுள்ள துளசிக்காட்டில் தான் புற்றில் மறைந்து இருப்பதை பெருமாள் கனவில் உணர்த்தினார். ஆதிவாசி மக்களின் உதவியுடன், அவர் பெருமாள் சிலையை எடுத்து பிரதிஷ்டை செய்தார். அம்மக்களை 'திருக்குலத்தார்' என்று பெயரிட்டு விஷ்ணு பக்தர்களாக்கினார். மன்னன் விஷ்ணுவர்த்தன் பெரும்பொருள் செலவில் திருநாராயணபுரம் கோயிலைக் கட்டினான்.






      Dinamalar
      Follow us