
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையக்கூடாது.
விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். தொடர்ந்து விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம்.

