ADDED : அக் 14, 2011 12:20 PM

கோர்ட்டில் தானே 'சாட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என்பதை சமஸ்கிருதத்தில் 'சாக்ஷி அல்லது சாக்ஷி' என்று உ<ச்சரிப்பார்கள். அன்னை பராசக்திக்கு 'விச்வ ஸாக்ஷிணீ' என்ற பெயர் உண்டு. 'விச்வம்' என்றால் 'உலகம்'. 'ஸாக்ஷிணீ' என்றால் 'சாட்சியாக இருப்பவள்'. உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள். 'ஸர்வதோக்ஷி' என்றும் அவளைச் சொல்லலாம். அதாவது எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள். இதையே கிராமமக்கள் 'ஆயிரம் கண்ணுடையாள்' என்கின்றனர். இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மரணத்துக்குப் பின் அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.