
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடியில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து மாப்பிள்ளையுடன் பெண்ணைத் தாய்வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பர்.
அதன்பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பர். பெண் தாய் வீட்டில் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையான கோடை காலத்தில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், சேய் உடல்நலன் பாதிக்கலாம் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.