ADDED : ஆக 02, 2024 01:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கநாதரின் தங்கையாக காவிரித்தாயை போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில் ஸ்ரீரங்கநாதர் அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு ரங்கநாதருக்கு அபிஷேகம் முடிந்த பின் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீதனங்களை யானையின் மீதேற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து படித்துறைக்குக் கொண்டு வருவர்.
பெருமாள் முன்னிலையில் பொருட்களை ஆற்றில் மிதக்க விடுவர். இந்தக் காட்சியை தரிசித்தால் குறையற்ற வாழ்வு அமையும்.