
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாக தோஷம் காரணமாக குழந்தை இல்லாதவர்கள் ஆடி வெள்ளியன்று அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர், நாகர் சிலைகளை ஏழுமுறை சுற்றுங்கள். இந்த நாகர் சிலையில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் இருக்கும். அதன் நடுவில் ஒரு சிவலிங்கம் இருக்கும். இந்த இரு பாம்புகளும் கணவன், மனைவியைக் குறிக்கும்.
கணவனும், மனைவியும் இணைந்து சிவலிங்கத்தை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியபின் நாகர் சிலையை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்வர்.