
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவனுக்கு வாழ்க்கை முறையை உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாவது கண்ணைத் திறப்பதாகும். அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிக புனிதமானது. வாமன மூர்த்திக்கு விசேஷமாக உபநயனம் நடத்தப்பட்டது. சூரியபகவானே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்தார்.
வாமன மூர்த்தி ஏன் பூணுால் அணிய வேண்டும்? பூலோகத்தில் உள்ள நாமும் சமஸ்காரங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே. வாமனரை வழிபட்டால் குழந்தைகளுக்கு சீக்கிரமாக உபநயனம் நடத்தும் பாக்கியம் கிடைக்கும்.