
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருவாயூர் கிருஷ்ணர் மீது நாராயண பட்டத்திரி பாடிய பாடல் நாராயணீயம்.
இதில், 1036 ஸ்லோகங்கள் உள்ளன. கிருஷ்ண ஜெயந்தியான இன்று இதைப் படிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும். இதிலுள்ள இந்த ஒரு ஸ்லோகத்தை பாடினால் நோய் தீரும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.