நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவக்கிரகங்கள் தங்களின் கடமையாற்ற புறப்படும் முன் திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ய வருவர். எனவே ஏழுமலையானின் பக்தர்களுக்கு கிரகதோஷம் உண்டாகாது. இதை வெங்கடேச சுப்ரபாத ஸ்லோகம் ஒன்று, 'தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் எல்லாம் திருப்பதி கோபுர வாசலில் ஏழுமலையானின் திருவடியை தரிசிக்க காத்திருக்கின்றன' என்கிறது.
திருமாலின் பக்தர்களை 'மறந்தும் புறந்தொழா மாந்தர்கள்' என போற்றுவர். அதாவது திருமாலைத் தவிர வேறு தெய்வத்தை அவர்கள் வழிபட மாட்டார்கள். பெருமாள் கோயில்களில் நவக்கிரக சன்னதியும் இருக்காது.