
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் தக்கலைக்கு அருகிலுள்ள கேரளபுரத்தில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறும் விநாயகர் இருக்கிறார். இவரை அதிசய விநாயகர் என்கின்றனர்.
கேரளபுரம் மன்னர் ஒருவருக்கு புதைந்த விநாயகர் சிலை கிடைத்தது. பிரசன்னம் பார்த்த போது, 'மரகதத்தால் ஆன இக் கல்லை பிரதிஷ்டை செய்தால் காலப்போக்கில் இதில் விநாயகர் வடிவம் வெளிப்படும்' என அதில் தெரியவந்தது. அதுபோல சுயம்புவாக தோன்றிய இவரை வழிபட்டால் சங்கடம் தீரும். வெற்றி தரும் இவருக்கு காரியசித்தி கணபதி என்றும் பெயர் உண்டு.
எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:45 மணி
தொடர்புக்கு: 94439 94342