ADDED : செப் 05, 2024 03:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் மாவட்டம் தீவனுாரில் சிவலிங்க வடிவில் விநாயகர் இருக்கிறார்.
முன்பு இப்பகுதியில் கதிர் அடிக்கும் கல் ஒன்று இருந்தது. அதில் விநாயகர் வடிவம் இருப்பதை அறிந்த பக்தர்கள் சிலர் கோயிலை உருவாக்கினர். இங்கு வந்த மிளகு வியாபாரி ஒருவரிடம் நைவேத்யம் செய்ய மிளகு தருமாறு கேட்டனர். அவரோ, 'பருப்பு தான் இருக்கு' என பொய் சொன்னார். சந்தைக்குச் சென்ற போது சாக்கில் பருப்பு இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். விநாயகரிடம் சரணடைய மிளகாக மாறியது. பொய், ஏமாற்றுவேலை செய்பவர்கள் பரிகாரமாக அருகம்புல் மாலை சாத்துகின்றனர்.
எப்படி செல்வது: விழுப்புரத்தில் இருந்து 41 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 94427 80813