
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே மணிமூர்த்தீஸ்வர விநாயகர் குடியிருக்கிறார். தேடி வருவோரை 'முன்னேறு... மேலே' என உயரச் செய்கிறார் இவர்.
தன் மடியில் மனைவி நீலவேணியை அமரச் செய்த நிலையில் இருக்கும் இவரை உச்சிஷ்ட கணபதி என்று அழைக்கின்றனர். ஐந்தடுக்கு ராஜகோபுரம், மதிற்சுவர், மூன்று பிரகாரம், ஐந்து மண்டபத்துடன் உள்ள இக்கோயில் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும். சங்கடஹர சதுர்த்தி, தமிழ் மாதப்பிறப்பு, தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
எப்படி செல்வது: திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94435 49441