நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்து இட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே! சப்பாணி
ஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி
பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே. கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே. உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என்கிறார் பெரியாழ்வார்.