நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலநுாறு கி.மீ., தொலைவில் இருந்து பக்தர்கள் புரட்டாசி சனி விரதம் இருந்து திருப்பதி வருகின்றனர். ஆனால் அவர்கள் கருவறையில் பெருமாளின் முன்னிலையில் நிற்பதோ கண் மூடித் திறக்கும் கணப்பொழுது தான். இதனால் பக்தர்கள் விமானத்திலுள்ள விமான வெங்கடேசரை நிதானமாக நின்று தரிசித்து மனநிறைவு அடைகின்றனர்.
இங்குள்ள ஆனந்த விமானம் மூன்றடுக்கு கொண்டது. மேரு மலையின் ஒரு பாகமே ஆனந்த விமானமாகி வெங்கடேசப் பெருமாளுடன் திருமலைக்கு வந்தது. பன்னிரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரநரசிங்கதேவன் என்னும் மன்னர் ஆனந்தநிலையம் முழுவதும் பொன் வேய்ந்தார்.