ADDED : செப் 27, 2024 12:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெல்லிய நுண்ணிடை மின் அணையாளை
விரிசடையோன் புல்லிய மென்முலை
பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத்
தொழும் அவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ
வெண்பகடு ஊரும் பதம் தருமே.
மெல்லிய இடை கொண்டவளே.
மின்னல் போன்றவளே. ஜடாமுடியுடைய சிவனை மணந்தவளே. தங்கம் போல் ஜொலிப்பவளே. வேதம் வகுத்த வழியில் வழிபடுவோருக்கு சுகவாழ்வு தருபவளே. அபிராமித்தாயே. உன்னை வணங்குகிறேன்.