ADDED : செப் 27, 2024 12:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முப்பெருந்தேவியரான துர்கை, லட்சுமி, சரஸ்வதியை வழிபடும் விழா நவராத்திரி. இதில் ஒன்பது நாட்களை மூன்றாகப் பிரித்து முதல் மூன்று நாள் துர்கையையும், அடுத்த மூன்று நாள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள் சரஸ்வதியையும் வழிபடுவர்.
அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரிப்பது சிறப்பு. மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபட வேண்டும். ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி திதிகளில் வழிபட்டால் நவராத்திரி விரத பலனைப் பெறலாம்.