
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழங்காலத்தில் வேடர்கள் பவுர்ணமியன்று இரவு காளி கோயிலில் பூஜை நடத்துவர். அதற்காக கோயிலுக்கு வந்த பெண்களில் ஒருத்தியை மகாகாளியாக அலங்காரம் செய்வர். அவளின் விரிந்த கூந்தலை பாம்புக்குட்டியால் கட்டுவர்.
காட்டுப்பன்றியின் கொம்பை மூன்றாம் பிறையாக நெற்றியில் சூட்டி, புலிப்பற்களை மாலையாக அணிவிப்பர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை மானின் மீது உட்கார வைப்பர். அவள் முன் உணவு வகைகளை நைவேத்யம் செய்வர். பூக்களைத் துாவி, வாசனை திரவியங்களை தீயில் இட்டு நறுமணம் கமழச் செய்வர். நள்ளிரவு வரை இந்த பூஜையை நடத்துவர்.