நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி கற்றவனே கண்கள் கொண்டவன். கற்காவிட்டால் கண்ணிருந்தும் பயனில்லை. கல்வியின் பெருமை பற்றி திருவள்ளுவர்,
''கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை'' என்கிறார். மகாபாரதத்தில் யட்சனாக வரும் எமதர்மன் தன் மகனைச் சோதிப்பதற்காக, ''விலை மதிப்பற்ற சொத்து எது?'' எனக் கேட்கிறான். இதற்கு தர்மர், ''கல்வியே விலை மதிப்பற்ற சொத்து'' என்கிறார்.