
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி கேள்வி, கலை, கலாச்சாரம், விஞ்ஞானம், மெய்ஞானம் என அனைத்திற்கும் தெய்வம் சரஸ்வதி. வேதங்களில் முதன்மையான ரிக்வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. வாக்தேவி, ஜ்யோதி ஸ்வரூபா, வாஜினீவதி, ருதாவரி என அழைக்கப்படும் அவள் வெண்பட்டு உடுத்தி வெள்ளை தாமரையில் வெள்ளை அன்னப் பறவை மீது அமர்ந்து அருள்புரிகிறாள். இன்று புத்தகங்கள், படிப்பிற்குத் தேவையான சாதனங்களை வழிபட்டால் ஞானம், கல்வியறிவை வழங்குவாள்.