நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமக்கு ஒரு ஊரும், பேரும் மட்டுமே இருக்கும். ஆனால் உலகாளும் நாயகிக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு திருநாமம். அவள் உலகையே ஆள்பவள் என்பதால் ஆயிரம் திருநாமங்களைப் பெற்றாள்.
அம்பிகையின் பெருமைகளை தேவி பாகவதம் விரிவாகச் சொல்கிறது. அசுரர்களை அழிப்பதற்காக ஆயிரம் கைகளில் ஆயிரம் ஆயுதங்கள் ஏந்தி நிற்கிறாள். இவள் எங்கும் நிறைந்தவள். அவள் பார்வைக்குள்ளே உலகம் அடங்கி இருக்கிறது. அவள் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது.
இதனால் 'ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்' என தேவியைக் குறிப்பிடுவர். லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் 'சகஸ்ராக்ஷி' என அம்பிகை அழைக்கப்படுகிறாள்.