ADDED : அக் 29, 2024 12:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.
இவ்வாறு மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார் முருகன். இதனை உணர்த்தும் விதமாக முருகன் திருச்செந்துாரில் ஆவணி, மாசி திருவிழாவின் போது மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருவார்.