
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாளை தரிசிக்க திதிகளான அஷ்டமியும், நவமியும் ஸ்ரீவைகுண்டம் சென்றன. அவரது தரிசனத்தை முடித்ததும் தங்களது மனக்குறையை வெளிப்படுத்தின.
'மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய நாள்களில் செய்வதில்லை. எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள். மிகவும் வருத்தமாக உள்ளது' என வேதனைப்பட்டனர்.
இதைக்கேட்டு புன்னகையுடன் பெருமாள், ''வருந்தாதீர்கள். அதை நான் சரிசெய்கிறேன். இப்போது மகிழ்ச்சியுடன் போய் வாருங்கள்'' என வாக்களித்தார். அவர்களும் எம்பெருமான் என்ன செய்து தங்களின் குறைகளை சரிசெய்ய இருக்கிறார் என ஆவல் கொண்டன.
பெருமாள் தான் வாக்களித்தப்படி அந்த நாட்களை புனிதம் ஆக்கினார். ஆம். நவமியன்று ராமராக அவதரித்தும், அஷ்டமியன்று கண்ணனாக அவதரித்தும் திதிகளுக்கு பெருமை அளித்தார்.